சாம்ப் மசாலா
ரம்ஜான் வரப்போகிறது. இந்நாளன்று எப்போதும் பிரியாணியை மட்டும் செய்து சாப்பிடாமல், அப்போது சற்று வித்தியாசமாக, மட்டனைக் ஒரு மசாலா போன்று செய்து பார்க்கலாம். இந்த வித்தியாசமான ரெசிபிக்கு பெயர் சாம்ப் மசாலா. இது மிகவும் எளிமையான ஒரு மட்டன் ரெசிபி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. அதுமட்டுமல்லாமல், இந்த ரெசிபியை பண்டிகை காலங்களில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது செய்தால், விருந்தினர்களிடம் இருந்து பாராட்டைப் பெறலாம். இப்போது அந்த சாம்ப் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Instructions
  1. செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  3. பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  5. அடுத்து தீயை குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
  6. பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  7. இப்போது சூப்பரான சாம்ப் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி சாதம் அல்லது சப்பாத்தியுடன்