வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.
நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு வேக விடவும்.