கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும்.
ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
எஞ்சியுள்ள எண்ணெயை ஒரு வாணலியில் இட்டு சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும்.
நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.
அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும்.
2 கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.
கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.