பன்னீர் துண்டுகளை வெந்நீரில் ஊறவைக்கவும். போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி பெருஞ்சீரகத்தையும் காய்ந்த மிளகாயை வறுத்து உடனே நசுக்கிய வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து எல்லாவற்றையும் சிறிது நேரம் வறுக்கவும்.
இப்போது நறுக்கப்பட்டத் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பளபளப்பாகும்வரை வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி எல்லாவற்றையும் கலந்து பாத்திரத்தை மூடி சிம்மில் சிறிது நேரம் வேகவைக்கவும்.
இதற்கிடையில் தண்ணீரில் இருந்து பன்னீரை எடுத்து வடிக்கட்டி, போதுமான எண்ணெயை சூடுபடுத்தி பன்னீர் துண்டுகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்க.
இப்போது வறுத்த பன்னீர் துண்டுகளை சிம்மில் உள்ள குழம்பில் சேர்த்து குழம்பு சுண்டும்வரை சூடுபடுத்தவும்.