பெப்பர் சிக்கன்
This hot & spicy peeper chicken recipe which brings out the true flavor of chettinad cuisine.
Course
Side Dish
Cuisine
Chettinad
Servings
Prep Time
5
people
10
minutes
Cook Time
30
minutes
Servings
Prep Time
5
people
10
minutes
Cook Time
30
minutes
Ingredients
1
கிலோ
சிக்கன்
3
மேசைக்கரண்டி
எண்ணெய்
1/2
தேக்கரண்டி
மஞ்சள் தூள்
உப்பு
தேவையான அளவு
1
மேசைக்கரண்டி
தயிர்
2
தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது
8
மிளகாய் வற்றல்
21/2
மிளகு
3
தேக்கரண்டி
முழு மல்லி
1
தேக்கரண்டி
சீரகம்
10
பல்
பூண்டு
3
கறிவேப்பிலை
Instructions
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.
வாணலியில் 1 /12 தேக்கரண்டி மிளகு, சீரகம், 4 மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போடவும்.
சிக்கனை ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் வறுத்து அரைத்த பொடியை போட்டு பிரட்டி விட்டு சிம்மில் வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்
மற்றொரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத் தேக்கரண்டி மிளகு, பூண்டு, 4 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை சிக்கனுடன் சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும். இது சிக்கனுக்கு ருசியையும், மணத்தையும், பார்ப்பதற்கு அழகையும் தரும்.
சுவையான, மணம் நிறைந்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் தயார்.