Chicken kulambu is one of the most popular recipe in south india,It has cooked with freshly roasted and ground spices which give wonderful aroma to the dish.
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
சிக்கனை கழுவி வைத்து கொள்ள வேண்டும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா,மற்றும் பட்டை சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் சிக்கன் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு கிளரி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.