தயிர் வடை
Thayir Vadai is the delicious snacks that can be made out of Urad Dal.
Servings Prep Time
4people 5hours
Cook Time
1hour
Servings Prep Time
4people 5hours
Cook Time
1hour
Ingredients
Instructions
  1. உடைத்த உளுந்தம் பருப்பை இரவிலேயே ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்.
  2. அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  3. இந்த மாவுக் கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும் வறுத்த சீரகத்தை உரலை கொண்டு நுணுக்கி மாவுக் கலவையில் சேர்க்கவும்.
  4. இப்பொழுது கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி கலந்து கொள்ள வேண்டும்.
  5. இந்த மாவுக் கலவையை வடை மாதிரி தட்டி சூடான எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
  6. வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  7. வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
  8. அதே நேரத்தில் ஒரு பெளலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் நன்றாக கிளறி கெட்டிப் பதம் கொண்டு வரவும்.
  9. பிறகு ஊற வைத்த வடையிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து விடவும் அதை ஒரு பெளலில் வைத்து அதன் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.
  10. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை சேர்க்கவும்.
  11. மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை அப்படியே மேலே தூவி அலங்கரிக்கவும்.
Recipe Notes
  1. வடையின் மேல் பூந்திகளை தூவி விட்டால் இன்னும் மொறு மொறுப்பான சுவை கிடைக்கும்
  2. இந்த வடையுடன் பப்டி, வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து பரிமாறினால் தயிர் வடை சாட் ரெடியாகி விடும்