முட்டை நூடுல்ஸ்
Egg Maggi Recipe – The perfect recipe if you want to add some protein and make it more filling. Easy, Kids and adult friendly!
Servings Prep Time
2people 5minutes
Cook Time
15minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. முதலில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயா சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  6. வதக்கியவற்றை கடாயில் ஓரமாக ஒதிக்கி வைத்து விட்டு மற்றொரு புறத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  7. முட்டையை நன்றாக கிளறி பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கிளறவும்.
  8. பெரிய கடாய் இல்லையென்றால் மற்றொரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு முட்டையை சேர்த்து தனியாக கிளறி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  9. இப்பபோது நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும். சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி.