கருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.
இப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் இப்பொழுது உப்பு, சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
பிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும் தண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்