மாங்காய் சாதம்
Mango rice or manga sadam is a variety mango flavored rice that is great for lunch boxes or any festivals.
Course
Lunch
Cuisine
Tamilnadu
Servings
Prep Time
1
people
10
minutes
Cook Time
10
minutes
Servings
Prep Time
1
people
10
minutes
Cook Time
10
minutes
Ingredients
1
கப்
மாங்காய்
(துருவியது)
1
கப்
பாசுமதி அரிசி
(வேக வைத்தது
1
தேக்கரண்டி
கடுகு
1
தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு
1
தேக்கரண்டி
கடலைப் பருப்பு
1/2
இன்ச்
இஞ்சி
(நறுக்கியது)
2
வரமிளகாய்
2
பச்சை மிளகாய்
சிறிது
கறிவேப்பிலை
1
சிட்டிகை
மஞ்சள் தூள்
உப்பு
தேவையான அளவு
எண்ணெய்
தேவையான அளவு
2
மேசைக்கரண்டி
நிலக்கடலை
Instructions
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பாசுமதி அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!!