முதலில் பருப்பை கழுவி குக்கரில் போட்டு ஒரு கப் பருப்பிற்கு 3 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து 5 விசில் விடவும்
பருப்புவெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுதுக்கொள்ளவும்
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு , உளுந்து , கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும் .
அடுத்து தக்காளி, முருங்கை காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,சாம்பார் பொடி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் .பின்னர் காய் முழுகும் வரை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அடுத்து வேகவைத்த பருப்பை சேர்த்து கலக்கவும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்கவிடவும் .