மட்டன் பிரியாணி
Learn how to make mouth watering and tempting muton biryani with step by step instruction on Hungryforever.net. This Biryani is everyone’s favourit.
Servings Prep Time
6people 15minutes
Cook Time
40minutes
Servings Prep Time
6people 15minutes
Cook Time
40minutes
Ingredients
மட்டன்:
சாதம்:
Instructions
  1. முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  2. பின் அந்த மட்டனில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. சிறிது நேரம் ஆன பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் போட்டு, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பாதாம் பேஸ்ட், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
  5. பின்பு ஊற வைத்துள்ள மட்டன் மற்றும் புதினாவைப் போட்டு, நன்கு கிளறி 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.
  6. பிறகு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, 45 நிமிடம் மட்டனை வேக வைத்து, இறக்க வேண்டும்.
  7. பின்னர் அரிசியைக் கழுவி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  8. அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சாதத்திற்கு கொடுத்துள்ள தண்ணீரை ஊற்றி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு, நன்கு தண்ணீரை கொதிக்க விட்டு, அரிசி மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  9. விசில் போனதும் குக்கரை திறந்து, ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மட்டன் கலவையை பரப்பி, மீண்டும் சாதத்தை போட்டு, மீதமுள்ள மட்டனை பரப்பி, தட்டு கொண்டு மூடி, அடுப்பில் வைத்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து இறக்கி, அதனை கிளறி விட்டால், சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி!!!