கோழிக்கறியில், நாட்டுக்கோழிக்கறி தான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும். நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
முதலில் மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து தக்காளி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.
20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி!!!
நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிட்டாலும், பர்ஃபெக்ட் சைட்டிஷ் ஆக பக்காவாக இருக்கும். கண்டிப்பா சமைச்சு சாப்பிட்டு பாருங்க.!