வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து எடுத்து குக்கரில் குழைய வேக விடவும். வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும்.