உருண்டைப் பதம் வரும் வரை இடை விடாமல் கிளரிக் கொண்டே இருக்கவும். சில நிமிடங்களில் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு பாகை ஊற்றினால் கரையாமல் இருந்து அதை ஒன்று திரட்டி சிறு உருண்டை செய்ய முடிந்தால் அது தான் உருண்டை பதம்.