புடலங்காய் கூட்டு
Try this simple and flavorful snake gourd kootu when you feel like eating . Kootu is one of the essential recipes in South Indian food.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. புடலங்காயை ஒரு ஸ்பூன் கொண்டு மேல் தோலை சொரண்டிவிடவும். பின் அதனை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை சுத்தமாக நீக்கி விடவும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. பாசி பருப்பை களைந்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 விசில் விட்டு எடுத்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரியவிடவும். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் வர மிளகாய் கருவேப்பில்லை சேர்த்து அதனுடன் நறுக்கிய புடலங்காய் துண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. புடலங்காய் முக்கால் பாகம் வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள பாசி பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். தேவைப் பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு 5 – 8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
  6. சூடான சுவையான புடலங்காய் சாதத்துடன் பரிமார தயார்!