ரவா பொங்கல்
Rava pongal recipe is a simple south indian breakfast recipe.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
25minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப் பருப்பை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  2. பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை போட்டு லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீண்டும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, மிளகு, சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
  4. பின்னர் வறுத்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
  5. பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கும் போது, வேக வைத்துள்ள பாசிப் பருப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க விட வேண்டும்.
  6. நீரானது ரவையிலிருந்து குறையும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
  7. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, தீயை குறைவில் வைத்து கிளறி, 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  8. அதற்குள் ஒரு சிறு வாணலியில் நெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்து, மற்றொரு அடுப்பில் இருக்கும் ரவையில் ஊற்றி, கிளறி இறக்க வேண்டும்.
  9. இப்போது சுவையான ரவை பொங்கல் ரெடி!!!