எள்ளு சிக்கன் குழம்பு
சிக்கன் குழம்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, சிக்கன் குழம்புகளின் சுவையானது மாறுபடும். அந்த வகையில், அசைவ உணவாளர்களுக்கு எள்ளு சிக்கன் குழம்பு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மேலும் இதன் செய்முறையும் மிகவும் எளிதானது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம். இப்போது அந்த எள்ளு சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Instructions
  1. சிக்கன் குழம்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, சிக்கன் குழம்புகளின் சுவையானது மாறுபடும். அந்த வகையில், அசைவ உணவாளர்களுக்கு எள்ளு சிக்கன் குழம்பு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மேலும் இதன் செய்முறையும் மிகவும் எளிதானது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம். இப்போது அந்த எள்ளு சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
  2. முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து சிக்கன் துண்டுகளைப் போட்டு 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
  4. பின்பு உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, சிக்கனை தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு அதே வாணலியில் எள் மற்றும் சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து, அரைத்து வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
  6. இறுதியில் தனியாக வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைவில் வைத்து, சற்று தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
  7. குழம்பானது சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  8. இப்போது சூப்பரான எள்ளு சிக்கன் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.