முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் காளானை சேர்த்து மசாலா காளானில் ஒன்று சேர 3-5 நிமிடம் நன்கு காளான் வேகும் வரை கிளறி விட வேண்டும்.
அடுத்து அத்துடன் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் பிரட்டி, வேண்டுமானால் சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி, அதோடு மிளகுத் தூள், உலர்ந்த வெந்தய கீரை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!