வெஜ் நூடுல்ஸ்
Vegetable noodles is a one pot meal that is spicy and delicious with the goodness of fresh spring vegetables.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
20minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. காய்களை கழுவி, நறுக்கிக் கொள்ளவும். காய்களுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு, நிறுத்தி விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறுத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து நீளமாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்தமல்லி சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பச்சை வாசனை போன பின், நறுக்கின தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைந்ததும் வேக வைத்துள்ள காய்களை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து கிளறவும்.
  4. பின்னர், நூடுல்ஸை சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். காய்கள் வேக வைத்த நீரும் சேர்த்துக் கொள்ளலாம். தேவையெனில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். நூடுல்ஸ் உதிரி, உதிரியாக வரும். நூடுல்ஸை மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.
  5. நூடுல்ஸ் வெந்ததும், உப்பு சரிப்பார்த்து டேஸ்ட் மேக்கரை சேர்க்கவும். பின் நன்கு கிளறி, மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது, சில துளிகள் எலுமிச்சையை பிழிந்து, பரிமாறலாம். தேவையெனில் கோஸின் அளவை அதிகமாக்கலாம். கோஸ் நூடுல்ஸுடன் நன்கு சேரும்.