கோதுமை பாயாசம்
Broken wheat is very healthy and also any dish prepared using broken wheat is good for diabetic patient.
Servings Prep Time
3people 90minutes
Cook Time
30minutes
Servings Prep Time
3people 90minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
  2. . ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
  3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.
  4. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
  6. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.
  7. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
  8. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
  9. அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
  10. தித்திக்கும் கோதி பாயாச ரெடி… 11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.