Recipes
Lauki Ki Kheer Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 150 கிராம் சுரைக்காய்
- 2 கப் தண்ணீர்
- 1/2 மேசைக்கரன்டி நெய்
- 1 மேசைக்கரன்டி உடைத்த முந்திரி பருப்பு
- 1/2 லிட்டர் பால்
- 3 மேசைக்கரன்டி சர்க்கரை
- 1 மேசைக்கரன்டி ஏலக்காய் பொடி
- 1 துளி கெவரா எஸன்ஸ்
Ingredients
|
|
Instructions
- முழு சுரைக்காயை பாதியாக வெட்டி தோலுரித்து கொள்ள வேண்டும். பிறகு சீவுகின்ற கருவியை கொண்டு அதை நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.
- இப்பொழுது துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடு படுத்த வேண்டும்.
- பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் சூடான கடாயில் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
- அதே நேரத்தில் அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றவும்.
- இப்பொழுது உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.
- அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.
- பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காய் பாத்திரத்தில் அதை எடுத்து ஊற்றவும்.
- 5-6 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
- சர்க்கரையை சேர்த்து அது முழுமையாக கரையும் வரை சமைக்க வேண்டும்.
- பிறகு அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் கெவரா எஸன்ஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
- நன்றாக கலக்கி அடுப்பை அணைத்து விடவும்
- பரிமாறும் கப்பிற்கு மாற்றி பரிமாறவும்.