NON-VEG
Prawn Thooku Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ இறால்
- 2 வெங்காயம் பெரியது
- 2 தக்காளி
- 1/2 தேக்கரண்டி இஞ்சி அரைத்து
- 1 தேக்கரண்டி பூண்டு விழுது
- 1/2 தேக்கரண்டி சோம்பு தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 2 தேக்கரண்டி தனியாத்தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- உப்பு தேவையான அளவு
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- 3 மேசைக்கரண்டி எண்ணெய்
Ingredients
|
|
Instructions
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். அது சூடானவுடன் சோம்பு போடவும். லேசாக நிறம் மாறியதும் வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போடவும்.
- நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை போடவும் பச்சை வாசனை போக வதங்கியதும் தக்காளியை போடவும்.
- தக்காளி போட்டதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து முதல் 15 நிமிடங்கள் வதக்கினால் போதும்.
- இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கிளறி விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான இறால் தொக்கு தயார்.