Christmas Recipes
Honey Cake Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 40 minutes |
Servings |
cake
MetricUS Imperial
|
Ingredients
- 100 கிராம் மைதா மாவு
- 60 மிலி தேன்
- 5 முட்டை
- 150 கிராம் கேஸ்டர் சுகர்
- 3/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 1/4 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும்.
- கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை சுமார் 10 நிமிடங்கள் அடிக்கவும்.
- மேலும் இதனுடன் எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும், பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.
- ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.
- பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
- தித்திக்கும் தேன் கேக் தயார்.