Tamil Recipes
கீமா சப்பாத்தி ரம்ஜான் ஸ்பெஷல்
மட்டன் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் வித்தியாசமான ஒரு ரெசிபி உள்ளது. அது என்னவென்றால், மட்டன் கீமாவை வைத்து எளிமையான முறையில் ஒரு சூப்பரான சப்பாத்தி செய்யலாம். பொதுவாக இந்த சப்பாத்தியானது ஒரு மொகலாய ரெசிபி. இந்த ரெசிபியை ரம்ஜான் அன்று செய்வதற்கு ஏற்ற ஒரு ரெசிபியும் கூட. இப்போது அந்த கீமா சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Prep Time | 20 minutes |
Servings |
MetricUS Imperial
|
Ingredients
- கீமா கலவைக்கு...
- மட்டன் கீமா - 500 கிராம்
- தயிர் - 1/2 கப்
- வெங்காயம் - 2 நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1/2 கப்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சப்பாத்திக்கு...
- கோதுமை மாவு - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- வெதுவெதுப்பான நீர் - 1 கப்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
Instructions
- முதலில் கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்தது, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
- பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.
- பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
- பின், ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும்.
- இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
- இப்போது சுவையான கீமா சப்பாத்தி ரெடி!!!