Pongal Recipes
Masala Vada Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Passive Time | 1 hours |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 3/4 கப் கடலை பருப்பு
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 பச்சை மிளகாய்
- 3 வரமிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
- கறிவேப்பிலை சிறிது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை நன்கு கழுவி, அதில் 1/4 கப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு மீதமுள்ள பருப்பை நன்கு அரைத்து, அத்துடன் வரமிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஓரளவு அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் வெங்காயத்தை போட்டு கிளறி, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!!!