General
மினி பிட்சா ரெசிபி
இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. அதற்காக அடிக்கடி பிட்சா கடைக்கு செல்ல முடியாது. ஆனால் வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால், பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். மேலும் இந்த பிட்சா செய்வதற்கு எந்த கஷ்டமும் படத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களே போதுமானது.
Servings |
MetricUS Imperial
|
Ingredients
- மைதா - 1/2 கப்
- கோதுமை மாவு - 1/4
- கப் ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் - 1/4
- கப் சர்க்கரை - 1 டீஸ்பூன்
- உப்பு - 1/2 டீஸ்பூன்
- ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
- டாப்பிங்ஸ்.
- பிட்சா சாஸ் - 1/4 கப்'
- காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
- சீஸ் - 1/2 கப் துருவியது
- சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
- ஓரிகானோ - தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, எண்ணெயுடன் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
- பின்பு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
- இப்போது சுவையான மினி பிட்சா ரெடி! இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.