Tamil Recipes
Mushroom Gravy Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 200 கிராம் பட்டன் காளான்
- 10 - 12 சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
- 2 தக்காளி (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தலை (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
- உப்பு தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு :
- 4 வர மிளகாய்
- 1 தேக்கரண்டி கொத்துமல்லி
- 1/2 தேக்கரண்டி மிளகு
- 1/2 தேக்கரண்டி ஜீரகம்
- 1/2 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை
- 3 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1/2 தேக்கரண்டி கசகசா
தாளிப்பதற்க்கு :
- 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1/2 அளவு பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1/2 தேக்கரண்டி சோம்பு
- 2 கொத்து கருவேப்பில்லை
Ingredients
வறுத்து அரைப்பதற்கு :
தாளிப்பதற்க்கு :
|
|
Instructions
- பட்டன் காளானை கழுவி சுத்தம் செய்து 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
- சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆரிய கலவையை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.
- ஒரு வாணலியில் என்னை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து வதக்கி பின் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- இதனுடன் அரைத்துவைத்துள்ள கலவையை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.
- காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும். குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது காளான் வெந்துவிட்டதெனில் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
- காரசாரமான காளான் குருமா தயார் !
Recipe Notes
இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.