Tamil Recipes
மட்டன் பிரியாணி ரம்ஜான் ஸ்பெஷல்
Prep Time | 4 minutes |
Cook Time | 60 minutes |
Servings |
MetricUS Imperial
|
Ingredients
- மட்டனுக்கு
- மட்டனுக்கு... மட்டன் - 1 கிலோ
- வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
- பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1/2 கப்
- புதினா - 1 கட்டு நறுக்கியது
- தேங்காய் பால் - 1/2 கப்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 டேபிள்
- ஸ்பூன் தண்ணீர் - 2 கப்
- சாதத்திற்கு
- பாசுமதி அரிசி - 2 கப்
- ஏலக்காய் - 4
- கிராம்பு - 4
- பட்டை - 2
- உப்பு - தேவையான அளவு நெய் - 2
- டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 4 கப்
Instructions
- முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
- பின் அந்த மட்டனில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு மணிநேரம் ஆன பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் போட்டு, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பாதாம் பேஸ்ட், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்பு ஊற வைத்துள்ள மட்டன் மற்றும் புதினாவைப் போட்டு, நன்கு கிளறி 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.
- பிறகு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, 45 நிமிடம் மட்டனை வேக வைத்து, இறக்க வேண்டும்.
- பின்னர் அரிசியைக் கழுவி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சாதத்திற்கு கொடுத்துள்ள தண்ணீரை ஊற்றி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு, நன்கு தண்ணீரை கொதிக்க விட்டு, அரிசி மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- விசில் போனதும் குக்கரை திறந்து, ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மட்டன் கலவையை பரப்பி, மீண்டும் சாதத்தை போட்டு, மீதமுள்ள மட்டனை பரப்பி, தட்டு கொண்டு மூடி, அடுப்பில் வைத்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து இறக்கி, அதனை கிளறி விட்டால், சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி!!!