NON-VEG
Prawn Biryani Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 35 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ இறால்
- 2 கப் பாசுமதி அரிசி
- 2 வெங்காயம்
- 1 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1 தேக்கரண்டி தயிர்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- மஞ்சள் தூள் சிறிது
- 1 கைப்பிடி மல்லித் தழை, புதினா
- உப்பு தேவையான அளவு
இறால் ஊற வைக்க:
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/4 தேக்கரண்டி மிள காய் தூள்
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் சிறிது
தாளிக்க:
- பட்டை சிறு துண்டு
- 3 லவங்கம்
- 3 ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- அன்னாசிப்பூ பாதி
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
இறால் ஊற வைக்க:
தாளிக்க:
|
|
Instructions
- முதலில் இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். . பச்சை மிளகாய் . வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது. தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
- பின் 2 கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்க கொதித்ததும் அரிசியை நன்கு வடித்து போடவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு சிநிதளவு நெய் சிறிது புதினா சேர்த்து நன்கு கிளரி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிம்டம் கழித்து இறக்கவும்.
- இறக்கி 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி பரிமாறவும் சுவையான இறால் பிரியாணி ரெடி.