NON-VEG
Prawn Curry Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 250 கிராம் இறால்
- 1 மூடி தேங்காய்
- 100 கிராம் வெங்காயம்
- 100 கிராம் தக்காளி
- 1 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது
- 1 எலுமிச்சம் பழம்
- 5 பச்சைமிளகாய்
- எண்ணெய் தேவைக்கு
- உப்பு தேவைக்கு
Ingredients
|
|
Instructions
- முதலில் நன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.தேங்காய்ப் பால் [முதல் பால்] பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.(நறுக்கியும் போடலாம்)
- பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்து இருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- அத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில்சேர்த்து இறால் வேகும் வரை நன்கு சமைக்கவும் பின்பு இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்..சுவையான கேரளா இறால் கறி தயார்.
- கேரளா இறால் கறியை தோசை,இட்லி,ஆப்பம்,சாதத்துடன் பரிமாறலாம் சுவையாக இருக்கும்.