Recipes
Seppankizhangu Varuval Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 4 சேப்பங்கிழங்கு
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 கப் சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் சிறிதளவு
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி தனியாத் தூள்
- பெருங்காயத்தூள் சிறிதளவு
- உப்பு தேவைக்கேற்ப
- கொத்தமல்லி தேவைக்கேற்ப
Ingredients
|
|
Instructions
- சேப்பங்கிழங்குகளை சுத்தமாக கழுவி பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து வேகவைக்கவும். பின்னர் சேப்பங்கிழங்குகளை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மஞ்சள் உப்பு மிளகாய் தூள், தனியாத் தூள் மற்றும் பெருங்காயத் தூள் கலக்கவும்.
- அதனுடன் நறுக்கிய சேப்பங்கிழங்கு சேர்த்து கிளறவும். 15 நிமிடங்களுக்கு அதனை ஊற வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்னர் மசாலா சேர்த்த சேப்பங்கிழங்கு களை கலந்து மிதமான சூட்டில் 5 முதல் 8 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- அதனுடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மென்மையாக கிளறவும்.
- அடிப்பிடிக்காமல் பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.