One Pot
Vegetable Biryani Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 காரட்
- 2 உருளைக்கிழங்கு
- 3/4 கப் பச்சைப்பட்டாணி
- 22 பல் பூண்டு
- 2 கொத்து புதினா
- 12 சின்ன வெங்காயம்
- 4 கொத்து கொத்தமல்லி
- 1 1/2 கப் தேங்காய்த்துருவல்
- 1 துண்டு இஞ்சி (பெரியது)
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 8 முந்திரி
- உப்பு தேவையான அளவு
- 2 தக்காளி
- 5 பச்சைமிளகாய்
- 2 1/2 கப் அரிசி
- 1 தேக்கரண்டி கசகசா
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 தேக்கரண்டி சீரகம்
- பிரிஞ்சி இலை சிறிது
- 1 சிட்டிகை மஞ்சள்தூள்
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
- 1 மேசைக்கரண்டி நெய்
Ingredients
|
|
Instructions
- பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி, புதினாவை கழுவி இலைகளைத் தனியே ஆய்ந்து வைக்கவும்.
- துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
- அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்.
- கேரட்டையும், உருளைக்கிழங்கையும் சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும்.
- தக்காளியை நான்கு துண்டங்களாக நறுக்கி வைக்கவும். பட்டாணியை குக்கரில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு, 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- நறுக்கின இஞ்சி, பூண்டில் 18 பல், ஏலக்காய், பாதி பட்டை, கொத்தமல்லி, புதினா, நறுக்கின வெங்காயத்தில் பாதி, கசகசா, 3 பச்சை மிளகாய், அரைத்தேக்கரண்டி சோம்பு, அரைத்தேக்கரண்டி சீரகம், கிராம்பு ஒன்று, இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, சோம்பு, சீரகம், சிறிது பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு பொரியவிடவும்.
- அத்துடன் மீதமுள்ள பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அடுத்தடுத்துப் போட்டு நன்கு வதக்கவும். மீதமுள்ள இரண்டு பச்சை மிளகாய்களையும் அப்படியே முழுதாகப் போட்டு லேசாக வதக்கவும்.
- அத்துடன் நறுக்கி வைத்துள்ள காரட், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து பிரட்டிவிடவும்.
- அதில் வெந்த பட்டாணியை போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- பின்னர் அதில் அரைத்த விழுதைப் போட்டு பிரட்டிவிட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். இப்போது அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- அதன்பிறகு தேங்காய் பாலை ஊற்றி, 4 கப் தண்ணீரையும் ஊற்றி, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொதிக்கும் போது மேலே கறிவேப்பிலை இலைகளை தூவவும்.
- 5 நிமிடம் கழித்து அரிசி மற்றும் தண்ணீர்க் கலவையைச் சேர்த்து உப்பு போட்டு, குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு மிகக் குறைந்த தீயில் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
- சுமார் 10 நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்து அதில் கொட்டி கிளறிக் கொள்ளவும்.
- சிறிது கொத்தமல்லி தழையினையும் தூவவும்.
- சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.