Recipes
Vendakkai Puli Kulambu Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 15 வெண்டைக்காய்
- 10 சின்ன வெங்காயம் (தோலுரித்தது)
- 1 தக்காளி (நறுக்கியது)
- 10 பற்கள் பூண்டு
- 3 மேசைக்கரண்டி புளிச்சாறு (எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி சர்க்கரை
தாளிப்பதற்கு
- 1 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 2 வரமிளகாய்
- கறிவேப்பிலை சிறிது
- 3-4 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
வறுத்து அரைப்பதற்கு
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 2 மேசைக்கரண்டி மல்லி
- 8-10 வரமிளகாய்
- 1/2 கப் துருவிய தேங்காய்
Ingredients
தாளிப்பதற்கு
வறுத்து அரைப்பதற்கு
|
|
Instructions
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து 7-10 நிமிடம் வதக்க வேண்டும்.
- அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
- பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!!!