NON-VEG
Mutton Kuzhambu Recipe In Tamil
Servings |
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ மட்டன்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி சோம்பு
- பட்டை, கிராம்பு கருவேப்பில்லை தேவையான அளவு
- 4 தேக்கரண்டி தாளிக்க சிறிதளவு எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.
- ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
- அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
- சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம்.
- சுவையான மட்டன் குழம்பு தயார்.