Tamil Recipes
Idli Manchurian Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 4 இட்லி
- 2 மேசைக்கரண்டி கடலை மாவு
- 2 மேசைக்கரண்டி பச்சரிசி மாவு
- 2 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
- 1 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி
- 1 சிட்டிகை கேசரி பவுடர்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1/4 தேக்கரண்டி சோடா உப்பு
- பச்சைக் கொத்தமல்லி சிறிது
- எண்ணெய் தேவைக்கேற்ப
Ingredients
|
|
Instructions
- தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவு, மிளகாய்ப் பொடி, கேசரி பவுடர், உப்பு, சிறிது கொத்தமல்லி இவற்றை ஒன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
- இத்துடன் சோடா உப்பை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து கலந்துக் கொள்ளவும்.
- இட்லியை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்த மாவில் இட்லி துண்டுகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- பொரித்த துண்டுகளின் மீது பச்சைக் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
- சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.