Kuska Biryani Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் பாஸ்மதி அரிசி
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 3-4 பச்சை மிளகாய்
- 2 ரம்பை இலை அல்லது பிரியாணி இலை
- பட்டை,கிராம்பு தலா இரண்டு
- 2-3 ஏலக்காய்
- 2 மே.கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/2 கப் தேங்காய் பால்
- 1/4 கட்டு கொத்தமல்லி , புதினா
- முந்திரி ஒரு கை பிடி
- 2 1/2 கப் தண்ணீர்
- உப்பு தேவைக்கு
- 3 மே.கரண்டி நெய்
- 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்
- 2 மே.கரண்டி எண்ணெய்
Ingredients
|
|
Instructions
- அரிசியினை நன்றாக அலசி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியினை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்
- பாத்திரத்தில் எண்ணெய் , நெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய ஒரு வெங்காயத்தினை மட்டும் போட்டு நல்ல பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் முந்திரியும் போட்டு பொறித்து எடுத்து தனியாக வைக்கவும்
- குக்கரில் பொறித்த எண்ணெயினை ஊற்றவும் அதில் ரம்பை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
- அதில் நீட்டமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடி பிடிக்காமல் சிம்மில் வைத்து கலந்துவிடவும்
- பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பொடிசாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும். பிறகு அதில் தேங்காய் பால் , தண்ணீர் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும். நன்றாக தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊறவைத்த அரிசியினை சேர்த்து கிண்டிவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் ஹையிலும் ஒரு விசில் லோவிலும் வைத்து அணைக்கவும்.
- 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து குஸ்காவின் மீது ரோஸ் வாட்டர் சுற்று வரை ஊற்றி மெதுவாக மரக்கரண்டி வைத்து கிண்டிவிடவும். இதனை அப்படியே வேற பவுலில் மாற்றி மேலே பொறித்து வைத்த வெங்காயம், முந்திரி போட்டு பரிமாரவும்.
- சுவையான குஸ்கா ரெடி, சாப்பிட சுவையாக இருக்கும்.
Recipe Notes