NON-VEG
Mutton Elumbu Kulambu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 35 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ மட்டன் எலும்பு கறி
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 3 தேக்கரண்டி மட்டன் மசாலா தூள்
- மஞ்சள் தூள் சிறிதளவு
- 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 தேக்கரண்டி மிளகு, சீரகம், கசகசா அரைத்தது
- 1 கப் தேங்காய் பால்
- 1 1/2 தேக்கரண்டி எண்ணைய்
- 1 அங்குலம் அளவு பட்டை
- 4 கிராம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
Ingredients
|
|
Instructions
- குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- நன்றாக வதக்கிய உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும்.
- உப்பு,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும். அப்பொழுதுதான் கறியில் உப்பு பிடிக்கும்.
- பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும்.
- 5 விசில் வரை விடவும் அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும்.
- விசில் இறங்கிய உடன் சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடலில் சத்து சேர்க்க இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள்.
- அதேபோல் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இந்த எலும்பு குழம்பு சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.