Recipes
Paneer Cutlet Recipe In Tamil
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 500 கிராம் பன்னீா்
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 4 வெங்காயம்
- 7 பச்சை மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 ½ மேஜைக்கரண்டி பூண்டு
- 1 ½ மேஜைக்கரண்டி இஞ்சி
- 1 தேக்கரண்டி சோம்பு தூள்
- 1½ மேஜைக்கரண்டி கரம் மசாலா தூள்
- 1 தேக்கரண்டி நல்ல மிளகு தூள்
- 3 உருளைக்கிழங்கு
பொரிக்க தேவையான பொருட்கள்:
- 4 மேஜைக்கரண்டி சோள மாவு
- உப்பு தேவையான அளவு
- 1½ கப் பிரட் தூள்
- எண்ணெய் பொரிக்க
Ingredients
பொரிக்க தேவையான பொருட்கள்:
|
|
Instructions
- கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.
- பின்பு உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.
- பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.
- கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் தயார்.