Tamil Recipes
Potato Fry Recipe in Tamil
Prep Time | 7 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 4 உருளை கிழங்கு
- 10-15 சின்ன வெங்காயம்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 1/4 தேக்கரண்டி உளுந்து
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பின்ச் பெருங்காயத்தூள்
- மிளகாய் தூள் தேவையான அளவு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- 1/4 தேக்கரண்டி தனியா தூள் (விருப்பப்பட்டால்)
Ingredients
|
|
Instructions
- நான் ஸ்டிக் (NON_STICK) தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- உருளை கிழங்கை 2 விசில் விட்டு எடுத்து நறுக்கி வைக்க வேண்டும்.
- வெங்காயத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், உருளை கிழங்கை சேர்த்து மூடி போட்டு வறுக்க வேண்டும்.
- உருளை கிழங்கு ரெடியானதும் மிளகுதூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.