Recipes
Potato Pizza Dosa Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் மைதா
- 1 கப் கோதுமை மாவு
- 1 கப் அரிசி மாவு
- உப்பு, எண்ணெய் தேவைக்கு
- 1/4 கப் ரவை
- 2 கப் தக்காளி
- 2 வெங்காயம்
- 2 மேசைக்கரண்டி குடைமிளகாய்
- 2 மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு
- 1 கப் துருவிய சீஸ்
- 2 மேசைக்கரண்டி உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன்
- வெண்ணெய் சிறிது
- கொத்தமல்லித்தழை சிறிதளவு
- 1 தேக்கரண்டி மிளகு தூள்
- 250 கிராம் உருளைக்கிழங்கு
- 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் சாஸ்
Ingredients
|
|
Instructions
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
- தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.