Recipes
Ridge Gourd Bajji Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ பீர்க்கங்காய்
- 1/2 கப் கடலை மாவு
- 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/4 மேசைக்கரண்டி பெருங்காயம்
- 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 மேசைக்கரண்டி சீரகம்
- உப்பு தேவைக்கேற்ப
- உப்பு, எண்ணெய் பொரிப்பதற்கு
- தண்ணீர் தேவைக்கேற்ப
Ingredients
|
|
Instructions
- பீர்க்கங்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது ஒரு துண்டுப் பகுதியை மட்டும் எடுத்து தோலை உரிக்கவும்.
- தோலுரித்த பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பெளலில் கடலை மாவை எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
- அதனுடன் மேலும் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- பிறகு உப்பு சேர்த்து கலவையை நன்றாக கலக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- 1-2 நிமிடங்கள் வரை எண்ணெய் நன்றாக சுடும் வரை காத்திருக்க வேண்டும்.
- பிறகு எண்ணெய்யை கடலை மாவு கலவையில் ஊற்ற வேண்டும்.
- பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கடலை மாவு பேட்டரை சரியான பதத்தில் தயாரிக்க வேண்டும்.
- இப்பொழுது பொரிப்பதற்கு எண்ணெய்யை கடாயில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
- நறுக்கிய பீர்க்கங்காயை இந்த பேட்டரில் நன்றாக முக்கி எடுக்க வேண்டும்.
- ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
- பஜ்ஜி பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
- இப்பொழுது பஜ்ஜியை எண்ணெய்யிலிருந்து எடுத்து நன்றாக எண்ணெய்யை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
- சூடான மொறு மொறுப்பான காரசாரமான பஜ்ஜி ரெடி