Recipes
Sundakkai Thuvayal Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கைப்பிடி சுண்டைக்காய்
- 4 பச்சை மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி (சிறியது)
- 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1/2 புளி எலுமிச்சை அளவு
- 1 மிளகு அளவு பெருங்காயம்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 2 தேக்கரண்டி உளுந்து
Ingredients
|
|
Instructions
- சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.
- பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவரும். பிறகு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும்.
- ஒரு காடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம், வரமிளகாய் போட்டு பொரிந்ததும் பச்சைமிளகாயைப் போடவும். அரை நிமிடம் வதக்கி சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
- அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போடவும். அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.
- ஆறியதும் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.