Tamil Recipes
Vazhaipoo Vadai Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 20 minutes |
Passive Time | 1 hours |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ
- 2 கப் கடலைப்பருப்பு
- 1 கைப்பிடி உளுத்தம் பருப்பு
- 1 தேக்கரண்டி சோம்பு
- 4 பச்சை மிளகாய்
- 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- கொத்தமல்லி சிறிதளவு
- புதினா சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
- கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
- மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.