Tamil Recipes
Chettinad Chicken Soup Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ கோழி(எலும்புடன்)
- 10 சின்ன வெங்காயம்
- 1 தேக்கரண்டி சீரகத்தூள்
- 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
- 1 பச்சை மிளகாய்
- 1 தக்காளி
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- பட்டை, லவங்கம் தலா 1
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1 தேக்கரண்டி தனியாத்தூள்
- 1 /2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- உப்பு, எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து
- தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
- பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.