Recipes
Chicken Biryani Recipe In Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 35 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ பாசுமதி அரிசி
- 1/2 கிலோ சிக்கன் (பெரிய துண்டுகள்)
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 5 பச்சை மிளகாய்
- 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 கப் தேங்காய் பால்
- 3 கப் தண்ணீர்
- 1/2 கப் கொத்தமல்லி , புதினா
- 1/2 கப் தயிர்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
- 2 துண்டுகள் பட்டை
- 5 கிராம்பு
- 1 பிரியாணி இலை
- 3 ஏலக்காய்
- 100 மில்லி எண்ணெய்
- 3 தேக்கரண்டி நெய்
- உப்பு - தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
- முதலில் சிக்கனை சிறிதளவு உப்பு, ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் அரைகப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
- இத்துடன் இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த கோழியை சேர்த்து கிளறவும்.
- இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் தம் போடவும்.
- சாதம் முழுதாக வெந்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார். இத்துடன் தயிர் ரைதா தொட்டுக்கொள்ள இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும். இந்த வகையான சிக்கன் பிரியாணி காரம் குறைவாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Recipe Notes