Recipes
Curd Vada Recipe In Tamil
Prep Time | 5 hours |
Cook Time | 1 hour |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் உடைத்த கருப்பு உளுந்து
- 11/2 டேபிள் ஸ்பூன் உப்பு
- 1/2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
- 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1 டேபிள் ஸ்பூன் வறுத்த சீரகம்
- 1 கப் கொத்தமல்லி இலை(நறுக்கியது)
- எண்ணெய் பொரிப்பதற்கு
- 1 டம்ளர் தண்ணீர்
- 400 கிராம் கெட்டித் தயிர்
- 3 மேசைக்கரண்டி சர்க்கரை
- 1/2 மேசைக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1 மேசைக்கரண்டி சாட் மசாலா
- 1/4 மேசைக்கரண்டி கரம் மசாலா
- 2 மேசைக்கரண்டி மாங்காய் சட்னி
- 1 மேசைக்கரண்டி கொத்தமல்லி சட்னி
- மாதுளை பழ விதைகள் அலங்கரிக்க
Ingredients
|
|
Instructions
- உடைத்த உளுந்தம் பருப்பை இரவிலேயே ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்.
- அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
- இந்த மாவுக் கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும் வறுத்த சீரகத்தை உரலை கொண்டு நுணுக்கி மாவுக் கலவையில் சேர்க்கவும்.
- இப்பொழுது கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி கலந்து கொள்ள வேண்டும்.
- இந்த மாவுக் கலவையை வடை மாதிரி தட்டி சூடான எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
- வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
- அதே நேரத்தில் ஒரு பெளலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் நன்றாக கிளறி கெட்டிப் பதம் கொண்டு வரவும்.
- பிறகு ஊற வைத்த வடையிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து விடவும் அதை ஒரு பெளலில் வைத்து அதன் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.
- அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை சேர்க்கவும்.
- மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை அப்படியே மேலே தூவி அலங்கரிக்கவும்.
Recipe Notes
- வடையின் மேல் பூந்திகளை தூவி விட்டால் இன்னும் மொறு மொறுப்பான சுவை கிடைக்கும்
- இந்த வடையுடன் பப்டி, வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து பரிமாறினால் தயிர் வடை சாட் ரெடியாகி விடும்