Egg Paniyaram Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் இட்லி மாவு
- 2 முட்டை
- 25 கிராம் சின்ன வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 தேக்கரண்டி, கடுகு
- 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
- உப்பு தேவையான அளவு
- 2 தேக்கரண்டி எண்ணெய்
Ingredients
|
|
Instructions
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.
- அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
- வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
- குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.
- பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முட்டைப் பணியாரம் தயார்.