Tamil Recipes
Kovakkai Poriyal Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் கோவைக்காய்
- 1/2 கப் பெரிய வெங்காயம்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- தேக்கரண்டி மல்லித் தூள்
- உப்பு தேவையான அளவு
அரைக்க:
- 1 தக்காளி (நறுக்கியது)
- 1/2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 1/2 தேக்கரண்டி சோம்பு
தாளிக்க:
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி கடுகு
- 3/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை சிறிது
Ingredients
அரைக்க:
தாளிக்க:
|
|
Instructions
- முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, சோம்பு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.
- பிறகு அதில் காய்கறியை சேர்த்து, 2 நிமிடம் மசாலா காய்கறியுடன் ஒன்று சேர நன்கு கிளறி விட வேண்டும்.
- பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, காய்கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, காய்கறி நன்கு வெந்ததும், தண்ணீர் வற்ற நன்கு கிளறி விட்டால், கோவைக்காய் பொரியல் ரெடி!!!