Pongal Recipes
Paal Pongal Recipe in Tamil
Instructions
- முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.